தனியார் பேருந்து முடிவை கைவிட வேண்டும் – முதலமைச்சருக்கு 10 தொழிற்சங்கங்கள் கடிதம்!

சென்னையில் தனியார் பேருந்துகள் இயக்கும் முடிவை கைவிடக் கோரி தொமுச, சிஐடியு உள்ளிட்ட 10 தொழிற்சங்க கூட்டமைப்புகள் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சென்னையில் தனியார் பேருந்துகள் இயக்கும் முடிவுக்கு தொமுச…

சென்னையில் தனியார் பேருந்துகள் இயக்கும் முடிவை கைவிடக் கோரி தொமுச, சிஐடியு உள்ளிட்ட 10 தொழிற்சங்க கூட்டமைப்புகள் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னையில் தனியார் பேருந்துகள் இயக்கும் முடிவுக்கு தொமுச உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், தொமுச, சிஐடியு உள்ளிட்ட 10 தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பபட்டுள்ளது.

அதில், ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகளை இயக்கும் முடிவைப் பெற வேண்டும். ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்பப் பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கடிதத்தில், தொமுச, சிஐடியு, ஏடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட 10 தொழிற்சங்க கூட்டமைப்பினர் கூட்டாக கையெழுத்திட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.