டோக்கியோ சென்றடைந்த இந்திய வீரர்கள்

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீரர்கள் டோக்கியோ சென்றடைந்தனர். ஜூலை 27 முதல் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்காக இந்திய துப்பாக்கிச்சுடுதல் வீரர்கள் குழு, இன்று டோக்கியோ சென்றடைந்தது. மேலும் டோக்கியோ வந்தடைந்த…

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீரர்கள் டோக்கியோ சென்றடைந்தனர்.

ஜூலை 27 முதல் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்காக இந்திய துப்பாக்கிச்சுடுதல் வீரர்கள் குழு, இன்று டோக்கியோ சென்றடைந்தது. மேலும் டோக்கியோ வந்தடைந்த போட்டியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யபட்டது.

குரோஷியா மற்றும் டெல்லியில் நடைபெற்ற ஐ.எஸ்.எஸ்.எப் உலக கோப்பை போட்டிகளில் இந்திய துப்பாக்கிச்சுடுதல் அணி அசாத்தியமான வெற்றிகளை பெற்றது. டெல்லியில் 50 வீரர்கள் பங்கேற்ற நிலையில், குரோஷியாவில் 14 வீரர்கள் மட்டுமே போட்டியிட்டனர்.

இந்திலையில், இந்தியாவில் இருந்து 18 விளையாட்டு பிரிவுகளின் கீழ் , மொத்தம் 126 விளையாட்டு வீரர்கள் டோக்கியோ செல்ல இருக்கின்றனர். இதில், முதல்கட்டமாக துப்பாக்கிச்சூடுதல் அணி ஜப்பான் சென்றடைந்தது.
ஒலிம்பிக்கில் 18 பிரிவுகளில் நடைபெறும் 69 போட்டிகளிலும் இந்தியா அதிகளவிலான போட்டிகளில் கலந்துகொள்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.