டிக்டாக் செயலி: ட்ரம்ப்பின் முடிவுக்கு தடை விதித்த அமெரிக்க நீதிமன்றம்!

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் டிக்டாக் செயலி மீதான தடைக்கு, அமெரிக்க நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோல்வியை தழுவினார். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் அதிக…

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் டிக்டாக் செயலி மீதான தடைக்கு, அமெரிக்க நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோல்வியை தழுவினார். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் அதிக இடங்களில் வெற்றி பெற்று பதவியேற்கவுள்ளார். இந்தியா டிக்டாக் செயலிக்கு தடை விதித்த பிறகு அமெரிக்காவிலும் இந்த செயலிக்கு எதிர்ப்பலை கிளம்பியது. டிக்டாக் செயலியானது அமெரிக்க பாதுகாப்புக்கு எதிராக இருப்பதாக டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.

இதையடுத்து சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்தின் டிக்டாக் செயலிக்கு கடந்த செப்டம்பர் 20-ம் தேதி முதல் தடை விதிக்கப்பட உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்ததார். இதையடுத்து டிக்டாக் செயலியை அமெரிக்க நிறுவனம் ஒன்று வாங்க இருப்பதாக தகவல் வெளியானது. எனவே டிக்டாக் செயலிக்கு தடைவிதிப்பதை அமல்படுத்துவது தாமதம் ஆனது.

இந்நிலையில், அதிபர் டிரம்ப்பின் டிக்டாக் செயலி தடைக்கு அமெரிக்காவின் பெடரல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. டிரம்ப் நிர்வாகம் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்ததாகவும் நீதிபதி விமர்சனம் செய்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply