ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு – சாவினுக்கு 21 ஆண்டுகள் சிறை

அமெரிக்க கருப்பரான ஜார்ஜ் பிளாய்டை காலால் அழுத்திக் கொன்ற வழக்கில் காவல்துறை அதிகாரி டெரெக் சாவினுக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் கடந்த 2020ம் ஆண்டு…

அமெரிக்க கருப்பரான ஜார்ஜ் பிளாய்டை காலால் அழுத்திக் கொன்ற வழக்கில் காவல்துறை அதிகாரி டெரெக் சாவினுக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் 25ம் தேதி ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தைச் சேர்ந்தவரை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்தனர். அப்போது, டெரெக் சாவின் என்ற போலீஸ் அதிகாரி, பிளாய்டை கீழே தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்து பலமாக அழுத்தினார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயரிழந்தார்.

இந்த சம்பவம் அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க காவல்துறை இனவெறியுடனும், காட்டுமிராண்டித்தனத்துடனும் நடந்து கொண்டதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.

இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க நீதித்துறை, முன்னாள் போலீஸ் அதிகாரி டெரெ சாவினுக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

டெரெக் சாவின் ஏற்கனவே வேறொரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 22.5 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

தற்போது டெரெக் சாவின் இரு தண்டனைகளையும் சேர்த்து அனுபவிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.