‘இந்த பாட்டும் ரத்தமும் போர்க் களமும், அவளை மறக்கத்தான், என்னை மறக்கத்தான்’ என்ற வரிகளுடன் வெளியானது பொன்னியின் செல்வன் டீசர்
மணிரத்னத்தின் கனவுப் படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்டவர்கள் நடித்திருக்கின்றனர். `பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரம் குறித்த அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டிருந்தது. இதில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, சுந்தர சோழனாக பிரகாஷ்ராஜ், வந்தியத்தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன் நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும், ஐஸ்வர்யா லட்சுமி பூங்குழலியாகவும், ஷோபிதா வானதியாகவும், சரத்குமார் பெரிய பழுவேட்டரையராகவும் மற்றும் பார்த்திபன் சின்னப் பழுவேட்டரையராகவும் நடித்திருக்கின்றனர்.
அண்மைச் செய்தி: ‘1000 மாற்றுத்திறனாளிகள் பங்குபெறும் விளையாட்டு விழா’
தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை லைகா புரொடெக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. அதிரடியான இசையில் தொடங்கும் பொன்னியின் செல்வன் டீசர் பரபரப்பான போர் சூழலை நம் கண்முன் காட்சிப்படுத்தியுள்ளது. பெரிய பெரிய அவசனக்கள் இல்லை என்றாலும், அதிரடியான சண்டைக் காட்சிகளுக்கு மத்தியில் ‘இந்த பாட்டும் ரத்தமும் போர்க் களமும், அவளை மறக்கத்தான், என்னை மறக்கத்தான்’ என எதிர்பார்ப்பைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது. இந்த டீசர் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த டீசரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
#PS1 releasing in Tamil, Hindi, Telugu, Malayalam and Kannada!@madrastalkies_ @LycaProductions #ManiRatnam @arrahman @Tipsofficial @TipsRegional#Vikram @actor_jayamravi @Karthi_Offl #AishwaryaRaiBachchan @trishtrashers
— Suriya Sivakumar (@Suriya_offl) July 8, 2022








