உலக தமிழ்ச் சங்கம் சார்பாக 12 அடி உயரமுள்ள 155 வது திருவள்ளுவர் சிலை
மாமல்லபுரத்தில் இருந்து தென்னாப்பிரிக்காவிற்கு வழியனுப்பும் நிகழ்ச்சி
நடைபெற்றது.
விஜிபி உலகத்தமிழ்ச்சங்கம் சார்பில் அதன் நிறுவனர் விஜிபி சந்தோஷம் ஏற்பாட்டில் வெளிநாடுகளில் உள்ள தமிழ் கல்வி ஆலயங்களுக்கு கடந்த 28 ஆண்டுகளில் இதுவரை பிரம்மாண்டமான 154 திருவள்ளுவர் சிலைகள் வடிவமைத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 155 வது சிலையாக 12 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்திலிருந்து தென்னாப்பிரிக்கா நாட்டின் டர்பன் நகரில் உள்ள க்ளேயர் வுட் கல்வி ஆலயத்திற்கு வழி அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது,
இதில் விஜிபி உலக தமிழ் சங்க நிறுவனர் சந்தோஷம் மற்றும் மல்லை தமிழ் சங்க
தலைவர் மல்லை சத்யா சிலையை வடிவமைத்த சிற்பி முருகன் ஆகியோர் வள்ளுவர்
சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வழியனுப்பி வைத்தனர்.







