சூரியூர் ஜல்லிக்கட்டு: தற்போது வரை 23பேர் படுகாயம்

சூரியூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 23 பேர் காயமடைந்துள்ளனர். திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொங்கலையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி, மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில்…

சூரியூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 23 பேர் காயமடைந்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொங்கலையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி, மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று நடைபெறுகிறது. சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 550 காளைகள், 300-க்கும் அதிகமான மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதுவரை காளைகள் முட்டியதில் 23 பேர் காயமடைந்துள்ளனர். அதில் படுகாயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply