சாலையோரம் வசிப்போருக்கு உதவிக்கரம் நீட்டிய நெதர்லாந்து இளைஞர்!

சாலையோரம் வசிப்போர் இரவு நேர கடுங்குளிரில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக Sleeping bag ஆக மாறும் ஜாக்கெட்டை நெதர்லாந்து இளைஞர் வடிவமைத்துள்ளார். நெதர்லாந்தை சேர்ந்த Bas Timmer என்ற இளைஞர் சாலையோரம் வசிப்போருக்கான ஜாக்கெட்…

சாலையோரம் வசிப்போர் இரவு நேர கடுங்குளிரில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக Sleeping bag ஆக மாறும் ஜாக்கெட்டை நெதர்லாந்து இளைஞர் வடிவமைத்துள்ளார்.

நெதர்லாந்தை சேர்ந்த Bas Timmer என்ற இளைஞர் சாலையோரம் வசிப்போருக்கான ஜாக்கெட் ஒன்றை வடிவமைத்துள்ளார். அவரது நண்பரின் தந்தை ஹைப்போதெர்மியா நோயால் உயிரிழந்தார். அவர் சாலையோரம் வசித்து வந்ததால் குளிர் காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வே இளைஞர் டிம்மரின் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது. சாலையோரம் வசிப்போருக்கு உதவும் வகையில் Sleeping bag ஆக மாறும் ஜாக்கெட் ஒன்றை வடிவமைத்துள்ளார். பகல் நேரத்தில் இதனை ஜாக்கெட்டாகவும், இரவு நேரத்தில் Sleeping bag ஆகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனை ஏராளமானோருக்கு கொடுத்து உதவி செய்துள்ளார்.

இதுவரை ஐரோப்பா, தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள 12,500 பேருக்கு இதனை கொடுத்து உதவியுள்ளார். மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை பயன்படுத்தியே இதனை தயாரித்து வருகிறார். அவர்களது பிரச்சனைகளுக்கு தன்னால் முழுமையான தீர்வை தர முடியவில்லை என்றாலும், தன்னால் இயன்ற உதவியை செய்வதாக கூறியுள்ளார். உலக நாடுகளுக்கு இதனை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் 100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வீடு இல்லாமல் சாலையோரமாக வசிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply