சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விரைவாக 12,000 ரன்களை கடந்து விராட் கோலி புதிய சாதனை!

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 12,000 ரன்களை கடந்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள், டி 20…

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 12,000 ரன்களை கடந்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள், டி 20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இன்று கான்பெர்ராவில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் களமிறங்கிய இந்திய அணி கேப்டன் விராட் கோலி 23 ரன்கள் எடுத்திருந்தபோது குறைவான ஒருநாள் போட்டிகளில் விரைவாக 12,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதன்மூலம் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் சச்சின் டெண்டுல்கர் தான் விளையாடி 300 ஆவது இன்னிங்சில் தான் 12,000 ரன்களை கடந்தார். ஆனால் விராட் கோலி தற்போது 242 அவது இன்னிங்சிலேயே 12,000 ரன்கள் எடுத்து அந்த சாதனையை முறியடித்துள்ளார். இன்றைய ஆட்டத்தில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் விராட் கோலி. இது இவருக்கு 251-ஆவது சர்வதே ஒருநாள் போட்டியாகும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply