ரங்கன் வாத்தியாருக்கு பிறந்த நாள்; பலரின் ஃபேவரிட் ஆக்டர் ’பசுபதி’ குறித்த சுவாரஸ்ய தகவல்கள்!

தமிழ் சினிவில்  ஒரு வெர்சடைல் நடிகராக புகழப்படும் ‘பசுபதி’  இன்று தனது 55-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.  தமிழ் திரையுலகில் வில்லன், குணச்சித்திரம், நகைச்சுவை எனப் பல வகையான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் விமர்சகர்களின்…

தமிழ் சினிவில்  ஒரு வெர்சடைல் நடிகராக புகழப்படும் ‘பசுபதி’  இன்று தனது 55-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

தமிழ் திரையுலகில் வில்லன், குணச்சித்திரம், நகைச்சுவை எனப் பல வகையான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் விமர்சகர்களின் பெரும் மதிப்பைப் பெற்றிருப்பவராக திகழும் பசுபதி மே 18 ம் தேதி 1969 ம் ஆண்டு  பிறந்தார்.

இவர் கமல்ஹாசனின் ‘விருமாண்டி’ படத்தின்  கொத்தாள தேவனாக நடித்ததில் இருந்து தீவிரமாக கவனிக்கப்படத் தொடங்கினார். அந்தப் படத்தில் ஒரு அசல் மதுரை மாவட்ட நபராகவே வாழ்ந்திருப்பார் பசுபதி.  குறிப்பாக அவர் மையக் கதாபாத்திரத்தில் நடித்த வெய்யில்,  அசுரன் போன்ற படங்களில் தெக்கத்தி மனிதர்களைக் கண்முன் நிறுத்தியிருப்பார்.

இதை வைத்து பசுபதி தென்தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதே பலரின் மனதில் தோன்றியிருக்கும். ஆனால் உண்மையில்  பசுபதி சென்னையை சேர்ந்தவர். 1980 கால கட்டங்களில் மெட்ராஸில் தீவிரமாக இயங்கி வந்த நாடகக் குழுவான முத்துச்சாமி கூத்துப்பட்டறையில் சேர்ந்து எந்தக் கதாபாத்திரத்தைக் கொடுத்தாலும் அதை அப்படியே உள்ளவாங்கி கச்சிதமாக வெளிப்படுத்துவதுதான் பசுபதியின் சிறப்பு.

கூத்துப்பட்டறையில் ஏற்கனவே இருந்த நடிகர் நாசர் மூலமாகப் பசுபதிக்கு கமல்ஹாசனின் அறிமுகம் கிடைத்தது. பின்னர் கமலின் பிரம்மாண்டக் கனவுப் படைப்பான ‘மருதநாயகம்’ படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கத் தொடங்கினார் பசுபதி. ஆனால் அந்தப் திரைபடம பாதியிலேயே நின்று போனது.

அதன் பின் நாசர் இயக்கி நடித்த ‘மாயன்’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார் பசுபதி. அதை தொடர்ந்து ‘ஹவுஸ்புல்’, ‘தூள்’, ’இயற்கை’, ‘அருள்’ என பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் 2004-ல் கமல் தயாரித்து இயக்கி நடித்த ‘விருமாண்டி’ படம்தான் பதியின் திரை வாழ்வில் டர்னிங் பாயிண்ட்டாக அமைந்தது.

அதன் பிறகு வில்லன் வேடங்களில் தொடர்ந்து ‘சுள்ளான்’, ‘மதுர’, ‘திருப்பாச்சி’ ஆகிய படங்களில்  நடித்து வந்தவர். கமலின் ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ படத்தில் நகைச்சுவை கலந்த வில்லனாக நடித்தார். குறிப்பாக குசேலன் படத்தில் ரஜினிகாந்தின் நண்பனாகவும், கதையின் முக்கியமான தூணாக ‘பாலு’ கதாபாத்திரத்தில் நடித்து, இல்லை வாழ்ந்து  நம்மை நெகிழ வைத்தார். இயக்குநர் வசந்தபாலனின் ‘வெயில்’ படத்தில் மையக் கதாபாத்திரத்தில் நடித்து விமர்சகர்கள் அனைவராலும் பாராட்டப்பட்டார்.

குறிப்பாக எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் வெளியான ‘ஈ’ படத்தில் நடித்ததற்காகச் சிறந்த துணை நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதையும் தமிழக அரசின் விருதையும் பெற்றார்.  தமிழ் மட்டுமின்றி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் என இன்று வரை பல்வேறு குணாதிசயம் கொண்ட பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் மக்களின் மனதில் நீங்காத இரு இடத்தை பிடித்துள்ளார்.

இதையடுத்து, கடந்த 2021ம் ஆண்டு இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் ‘ரங்கன் வாத்தியார்’ கதாபாத்திரத்தில் மிடுக்குடன் நடித்திருப்பார் பசுபதி. இவரின் இந்த கதாபாத்திரம் இவரைப் புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. வாத்தியார் என்ற பெயரில் மீம்ஸ்-கள் பல இணையத்தில் பரவலாக சுற்றி வந்தன.

இந்நிலையில், சார்பட்டா பரம்பரை படத்தின் 2ம் பாகம் உருவாகவுள்ளதாகவுள்ள நிலையில் இப்படத்தில் இவரின் நடிப்பைக் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அந்த வகையில் இன்று 55வது பிறந்த நாள் காணும் இவருக்கு ரசிகர்கள், திரைத்துறையினர் என பலரும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.