சசிகலாவின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம்: மருத்துவர்கள் தகவல்!

சசிகலாவின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் சசிகலா அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…

சசிகலாவின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் சசிகலா அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் நிமோனியாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்நிலையில் சசிகலாவின் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு நிலையாக உள்ளதாகவும், அவரது உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் விக்டோரியா மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சசிகலாவுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ குழுவின் தலைவர் ரமேஷ் கிருஷ்ணா, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், விக்டோரியா மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்ட சசிகலாவுக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டதாகவும், இதில் அவருக்கு கடுமையான நுரையீரல் பாதிப்பு இருப்பது தெரிய வந்ததாகவும் கூறினார். இதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது என்றும் அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply