கொரோனா தாக்கத்தை பூஜ்ஜியமாக்குவதே அரசின் இலக்கு- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்!

கொரோனா தாக்கத்தை பூஜ்ஜியமாக்க வேண்டும் என்பதே அரசின் இலக்கு என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் நம்பிக்கையும் ஏற்படுத்தும் விதமாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தடுப்பூசி…

கொரோனா தாக்கத்தை பூஜ்ஜியமாக்க வேண்டும் என்பதே அரசின் இலக்கு என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் நம்பிக்கையும் ஏற்படுத்தும் விதமாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சுகாதாரத் துறைச்செயலாளர் ராதாகிருஷ்ணன், பாதுகாப்பு ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக கூறினர். மேலும் நேற்று தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்த அவர், கொரோனா தாக்கத்தை பூஜ்ஜியம் ஆக்க வேண்டும் என்பதே அரசின் இலக்கு என்றார். மேலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள 6 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply