பொங்கல் விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.
பொங்கல் விடுமுறையையொட்டி, மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு, சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். கொடைக்கானலின் முக்கிய பகுதிகளான மோயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், குணா குகை உள்ளிட்டவற்றை, சுற்றுலா பயணிகள் அதிகம் பார்வையிட்டு வருகின்றனர். மேலும், கொடைக்கானலில் நிலவும் ரம்மியமான சூழலை குடும்பத்துடன் அனுபவித்து, இயற்கை காட்சிகளை ரசித்துச் செல்கின்றனர். சுற்றுலா பயணிகளின் வருகையால், கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.







