கொரோனா தடுப்பு மருந்து வந்துவிடும் என பொதுமக்கள் யாரும் அலட்சியமாக இருக்க வேண்டாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஐஐடி மாணவர்களை, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார். அப்போது, மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் அவர் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், 28 மாணவர்கள் குணமடைந்து இன்று வீடு திரும்பி உள்ளதாக தெரிவித்தார். ஐஐடி விடுதியில், மாணவர்கள் அனைவரும் ஒரே பகுதியில் அமர்ந்து உணவு சாப்பிட்டதே கொரோனா பரவலுக்கு காரணம் என்றும் அவர் கூறினார். அனைத்து கல்லூரி நிலையங்களுக்கும் கொரோனா தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.







