கல்வி உதவித் தொகை திட்டத்துக்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில், உயர் கல்விக்கு தமிழக அரசு 2,110 கோடி ரூபாய் செலவிடுவதாக குறிப்பிட்டுள்ளார். முழுத் தொகையை செலுத்த வேண்டும் என்றால் அரசுக்கு நிதிச்சுமை ஏற்படும் என தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி, இதற்காக மத்திய அரசு 584 கோடி ரூபாய் மட்டுமே வழங்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். பள்ளிக்கு பிறகான கல்வி உதவித் தொகை திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
உயர்கல்வி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையில் 60 சதவீத பங்களிப்பை மத்திய அரசு வழங்க வேண்டும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.







