இந்தியாவில் மீண்டும் பப்ஜி விளையாட்டை அறிமுகம் செய்வதில் சில சிக்கல்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் பப்ஜி கேமிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். காலை, இரவு என நேரம் பாராமல் இளைஞர்கள் பலர் இதனை விளையாடி வந்தார்கள். இதனிடையே, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பல்வேறு செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதில் பப்ஜியும் ஒன்று. முதலில் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட இந்த செயலி, பிறகு மொத்தமாக முடக்கப்பட்டது.
இந்த விளையாட்டு மீண்டும் இந்தியாவுக்கு வரவிருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் பப்ஜி நிறுவனமும் இந்தியாவில் மீண்டும் களமிறங்கவிருப்பதாக அறிவித்தது. அதற்கேற்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்தது. அதனால் பப்ஜியின் வரவை அதன் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
ஆனால் மத்திய அரசிடம் இருந்து உரிய அனுமதி வந்தால் மட்டுமே அந்த நிறுவனத்தால் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். அதனால்தான் பப்ஜியை மீண்டும் அறிமுகம் செய்வதற்கான தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. மத்திய அரசு உடனடியாக அனுமதி அளிக்க வாய்ப்பில்லை என்பதால், பப்ஜி மீண்டும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கான காலம் அருகில் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.







