கயாடு லோகரின் புதிய போஸ்டரை வெளியிட்ட ‘பள்ளிச்சட்டம்பி’ படக்குழு…….!

டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை கயாடு லோகரின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மலையள திரையுலகின் குறிப்படத்தகுந்த நடிகர்களில் ஒருவர் டொவினோ தாமஸ். இவர் நடிப்பில் வெளியான லூசிபர், மின்னல் முரளி, ஐடெண்டிட்டி மற்றும் நரிவேட்டை ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழில் இவர் தனுஷின் மாரி 2 படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் கடந்தாண்டு வெளியாகி வசூலை வாரி குவித்த லோகா திரைப்படத்தில் சாத்தான் என்ற கதாப்பாத்திரத்தில் டொவினோ தாமஸ் நடித்திருந்தார் .

டொவினோ தாமஸ் தற்போது டிஜோ ஜோஷ் ஆண்டனி இயக்கத்தில் ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கயாடு லோகர் நடிக்கிறார். இந்நிலையில், கயாடு லோகரின் பர்ஸ்ட் ஃலுக் போஸ்டரை பள்ளிச்சட்டம்பி படக்குழு வெளியிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.