புதுச்சேரியில் அதிக சுமையுடன் நின்று கொண்டிருந்த லாரி ஒன்று அருகே இருந்த
வாய்காலில் சரிந்து விழும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரி லிங்காரெட்டிபாளையத்தை சேர்ந்தவர் நாராயணமூர்த்தி (32) ஒட்டுனரான
இவர் இன்று காலை குமிடிபூண்டியில் இருந்து லாரியில் அலுமினிய தூகல்கள் ஏற்றி
கொண்டு புதுச்சேரி மேட்டுப்பாளையத்திற்க்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது லிங்காரெட்டிபாளையத்தில் உள்ள தனது வீட்டில் மதிய உணவு சாப்பிடுவதற்காக வீட்டின் அருகே உள்ள வாய்க்கால் பக்கத்தில் லாரியை நிறுத்தி விட்டு
உணவருந்துவதற்காக சென்றார். லாரி நிறுத்தப்பட்ட இடத்தில் மழை பெய்து சேரும் சகதியிமாக இருந்தததால் அதிக சுமை கொண்டு நிறுத்தப்பட்டிருந்த லாரி உள்வாங்கத்த தொடங்கி கண்ணிமைக்கும் நேரத்தில் அருகே இருந்த வாய்க்காலுக்குள் தலைகுப்பர கவிழ்ந்தது.
இதனை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்ததை அடுத்து, அந்த வீடியோவானது தற்போது சமூக வளைதளங்களில் வைராலாகி வருகின்றது, மேலும் இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் லாரியை வாய்காலில் இருந்து மீட்டனர்.







