திருப்பூர் அருகே 8 மாத கர்ப்பிணி, கணவருடன் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் ஊராட்சி, மீனாட்சி நகரில் வசித்து வந்தவர் பாலமுருகன். இவரது மனைவி கவிதா. 8 மாத கர்ப்பிணியாக உள்ள இவர், கணவருடன் தூக்கிட்டுஉயிரை மாய்த்துக் கொண்டார். இதுதொடர்பாக காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தங்கள் மரணத்திற்கு யாரும் காரணமில்லை என அவர்கள் எழுதி வைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர்களது மரணத்திற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரசவம் நெருங்கும் நேரத்தில் கர்ப்பிணி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.







