ஒரே நாளில் 1 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் முதல் முறையாக கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 558 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய…

இந்தியாவில் முதல் முறையாக கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 558 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 25 லட்சத்து 89 ஆயிரத்து 67ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 478 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 101ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 52 ஆயிரத்து 847 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 16 லட்சத்து 82 ஆயிரத்து 136ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் இதுவரை 7 கோடியே 91 லட்சத்து 5 ஆயிரத்து 163 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.