ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் இருந்து டேவிட் வார்னர் விலகல்!

காயம் காரணமாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் தொடரில் இருந்து விலகினார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. தற்போது ஒருநாள்…

காயம் காரணமாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் தொடரில் இருந்து விலகினார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. தற்போது ஒருநாள் போட்டி நடந்து வரும் நிலையில் நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியே வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் வெற்றி உறுதியாகியுள்ளது.

இதனிடையே நேற்றைய போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் அடுத்து வரும் போட்டிகளில் தொடர முடியுமா என்ற சந்தேகமும் ஏற்பட்டது. இந்நிலையில் காயம் காரணமாக டேவிட் வார்னர் மீதமுள்ள ஒருநாள் போட்டி மற்றும் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு ஓய்வு தேவைப்படுவதாகவும், டிசம்பர் 17ம் தேதி நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டிக்கு அவர் தயாராகி விடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply