இந்தியா தொழில்நுட்பங்களில் முன்னேற்றம் கண்டு வரும் நிலையில் ஹேக்கர்களும் கைவரிசை காட்டி வருகின்றனர். குறிப்பாக ஸ்டார்டப் நிறுவனங்களுக்கு இது மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. சிறு, குறு தொழில்கள் இந்த தாக்குதலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தினமும் 4 லட்சம் மால்வேர் மற்றும் 375 சைபர் தாக்குதல் கண்டுபிடிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. WhiteHat Jr, Big Basket, Dunzo ஆகிய நிறுவனங்கள் இந்த தாக்குதல் தொடர்பாக புகாரளித்துள்ளன.
WhiteHat Jr:

இந்நிறுவனம் சேமித்து வைத்துள்ள 2.8 லட்சம் மாணவர்களின் தரவுகள் ஆபத்தில் இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதனையடுத்து 24 மணி நேரத்தில் அந்த பிரச்சனை சரி செய்யப்பட்டதாக அந்நிறுவனம் விளக்கமளித்தது.
BigBasket:

பிரபல ஆன்லைன் மளிகைப் பொருட்கள் ஷாப்பிங் தளமான BigBasket-லும் இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது. சுமார் 20 மில்லியன் பயனர்களின் தரவுகளுக்கு அச்சுறுத்தல் எழுந்தது. இதனை அந்நிறுவனமும் உறுதி செய்திருந்தது. இதனை சரி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்திருந்தது.
Dunzo:

கடந்த ஜூலை மாதம் இந்நிறுவனத்தில் உள்ள 3.4 மில்லியன் பயனர்களின் தரவுகள் சைபர் தாக்குதலால் கசிந்ததாக தெரிவிக்கப்பட்டது. மொபைல் எண், இ-மெயில் ஐடி உள்ளிட்ட தகவல்கள் மட்டுமே அதில் இருந்ததாகவும், வங்கி கணக்கு உள்ளிட்ட தகவல்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
Unacademy:

சுமார் 22 மில்லியன் பயனர்களின் தரவுகள் சைபர் தாக்குதலுக்கு உள்ளானது. இதில் 11 மில்லியன் பயனர்களின் தரவுகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டது. பயனர்களின் தரவுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்தது.







