ஐதராபாத்தில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு பேர் திருவள்ளூரில் கைது செய்யப்பட்டனர்.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தொடர் ஏடிஈம் கொள்ளையில் ஈடுபட்ட ஹரியானாவை சேர்ந்த எட்டுப் பேரில் 6 பேர் ஆந்திராவில் கைது செய்யப்பட்ட நிலையில் இரண்டு பேர காஞ்சிபுரம் மாவட்டத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், கொள்ளையர்களின் செல்போன் எண்ணை வைத்து டிஐஜி சாமுண்டீஸ்வரி தலைமையிலான காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது திருவள்ளூரை அடுத்த கைவண்டுர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் டீசல் போடும்போது எஸ்பி அரவிந்தன் தலைமையிலான காவல்துறையினர் இரண்டு கொள்ளையர்களையும் கைது செய்தனர். பின்னர் திருவள்ளூர் போலீசார் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







