மதுரை மருத்துவ கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை!

மதுரை அரசு மருத்துவ கல்லூரி மாணவருக்கு கொரானா தொற்று உறுதியான நிலையில் கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்துவருகின்றனர். தமிழகத்தின் கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த 8 மாதங்களாக கல்லூரிகள்…

மதுரை அரசு மருத்துவ கல்லூரி மாணவருக்கு கொரானா தொற்று உறுதியான நிலையில் கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்துவருகின்றனர்.

தமிழகத்தின் கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த 8 மாதங்களாக கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் டிசம்பர் 7ஆம் தேதி கல்லூரிகள் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் திறக்க அரசு அனுமதி அளித்திருந்த நிலையில் சென்னை IIT யில் உள்ள மாணவர்கள் 100 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்க்கப்பட்டனர். இந்நிலையில் மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் பயின்று வரும் முதலாமாண்டு மாணவர் ஒருவருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது அந்த மாணவர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருடன் விடுதியில் அறையில் தங்கி இருந்த மாணவர்கள் மற்றும் கல்லூரியில் பயிலும் 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து வருவதாக மருத்துவ கல்லூரியின் முதல்வர் சங்குமணி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply