ஆஸ்திரேலிய கிரிக்கெட் விரர் டேவிட் வார்னர் சமீப காலமாக டிக்டாக் மூலம் இந்திய ரசிகர்கள் பலரை கவர்ந்து வருகிறார். புட்ட பொம்மா பாடலுக்கு வார்னர் தன் மனைவி, குழந்தைகளுடன் டிக்டாக்கில் ஆட்டம் போட, அந்த வீடியோ உச்சபட்ச டிரெண்டிங் ஆனது. இதன் மூலம் இந்திய ரசிகர்கள் குறிப்பாக தென்னிந்திய ரசிகர்களை பெருமளவில் ஈர்த்தார். அதன் பின் அவர்களை மகிழ்விக்க தொடர்ச்சியாக அவர் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தென்னிந்திய ரசிகர்களை மகிழ்விக்க தற்போது Face app செயலிக்குள் குதித்துள்ளார் வார்னர். எந்திரன், பாகுபலி, சுல்தான், ராம்போ என திரைப்பட காட்சிகளில் தனது முகத்தை கிராப்பிக்ஸ் செய்து அவர் வெளியிடும் வீடியோக்கள் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. வார்னரின் இந்த பதிவுகளால் இன்ஸ்டாகிராமில் அவரை பின் தொடர்வோர் எண்ணிக்கை 5 மில்லியனை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
https://www.instagram.com/p/CInE2z7lMyy/?utm_source=ig_web_copy_link







