நடிகர் கார்த்திக் சபேஷ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்!

மறைந்த இசையமைப்பாளர் சபேஷின் மகனும், நடிகருமான கார்த்திக் சபேஷ் சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

மறைந்த இசையமைப்பாளர் சபேஷின் மகன் நடிகர் கார்த்திக் சபேஷ் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். கடந்த ஆண்டு இசையமைப்பாளர் சபேஷ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இந்நிலையில், 37 வயதே ஆன அவரது மகனும் நடிகருமான கார்த்திக் சபேஷ் உடல்நலக்குறைவு காரணமாக மரணித்துள்ளது குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் கார்த்திக் சபேஷ் தம், வல்லவன், பட்டத்து யானை, குளிர் 100 உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார் என்கிற அறிவிப்பை குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். இவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள்இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று மாலை 4.30 மணியளவில் வளசரவாக்கம் மயானத்தில் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.