தமிழ்த்திரை உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வளம் வந்த சந்தானம் கண்ணா லட்டு தின்ன் ஆசியா படம் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இதனைத்தொடர்ந்து சந்தானம் ஹீரோவாக நடித்த படங்கள் களவையான விமர்சனங்களை பெற்றாலும் அவர் கடைசியாக நடித்து வெளியான படங்கள் ரசிகர்களிடையே பெறும் வரவேற்ப்பை பெற்றது. இதனிடையே சிம்புவின் 49-வது படத்தில் சந்தானம் மீண்டும் காமெடி ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளொயாகியுள்ளது.
இந்த நிலையில் சந்தானம் ஹீரோவாக நடிக்கும் 20-வது படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. இந்தப்படத்தை சுதாமன் கிருஷ்ணா இயக்குகிறார். இப்படம் ‘டைம் டிராவல்’ குறித்த கதையம்சம் கொண்டதாக உறுவாகியுள்ளதாக தகவல்கள வெளியாகியுள்ளது. வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் மற்றும் கே7 ஸ்டூடியோஸ் சார்பில் கே.ஜே.கணேஷ், விஜய் கே செல்லையா ஆகியோர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப்படத்திற்கு ‘அதிசய பிறவி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இதில் கோபிகா ரமேஷ், ஜென்சன் திவாகர், ரெடின் கிங்ஸ்லி, ஜார்ஜ் மரியான் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், பாடல்கள் உள்ளிட்ட பிற அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




