கடந்த சில தினங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் தேவா காலமான நிலையில் தற்போது அவரது இசையில அறிமுகமான பாடகர் கிருஷ்ணராஜ் உடல்நலக் குறைவால் காலமானார். அவர் 300-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். திருப்பதி ஏழுமலை வெங்கடேசா, காத்து அடிக்குது, சிரிச்சுட்டு போனாலும், தஞ்சாவூரு மண்ணு எடுத்து உள்ளிட்ட பல்வேறு பாடல்களை பாடியுள்ளார்.
மேலும் 2000-க்கு பிறகு பருத்திவீரனில், ’அய்யயோ’ கழுகு திரைப்படத்தில், ’ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்’ ஆகிய பாடல்களைப் பாடி ஹிட் கொடுத்த அவர் இறுதியாக, சூரரைப் போற்று திரைப்படத்தில் நாலு நிமிஷம் பாடலைப் பாடியிருந்தார்.
இந்த நிலையில், 75 வயதான கிருஷ்ணராஜ் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். இவரது உடல் சென்னை, வளசரவாக்கத்திலுள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தேவா மறைந்து சில நாட்களிலேயே அவரது ஆஸ்தான பாடகரான கிருஷணராஜ் மறைந்தது இசை ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த பாடகர் கிருஷ்ணராஜ் பாடிய மறக்க முடியாத பாடல்கள்
வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா – காதல் கோட்டை (1996)
தஞ்சாவூரு மண்ணு எடுத்து – பொற்காலம் (1997)
கருடா கருடா – நட்புக்காக (1998)
சின்ன காணாங்குருவி – பொற்காலம் (1997)
வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி – காதலே நிம்மதி (1998)
சோக்கு சுந்தரி – மூவேந்தர் (1998)
ஜனவரி நிலவே – என் உயிர் நீதானே (1998)
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா – நினைவிருக்கும் வரை (1999)
காத்தடிக்குது காத்தடிக்குது – நினைவிருக்கும் வரை (1999)
ஆயா ஒன்னு அடம்பிடிக்குது – நினைவிருக்கும் வரை (1999)
எப்பா எப்பா அய்யப்பா – ஏழையின் சிரிப்பில் (2000)
பஞ்சுமெத்தை கிளியே – இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி (2006)




