பெண்கள் தற்போது அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகின்றனர். பிரபல நிறுவனங்களின் முக்கிய பொறுப்புகளில் பெண்கள் அமர்த்தப்பட்டிருக்கின்றனர். அவர்கள் தங்கள் திறமையால் குறிப்பிட்ட நிறுவனங்களை முன்னேற்றி வருகின்றனர். அந்தவகையில் உலகளவில் அதிக நிதியுதவி பெற்ற பெண் நிறுவனர்களை இங்கே காண்போம்.
லூசி பெங்:
சீனாவின் பிரபல நிறுவனமான அலிபாபா குரூப்பின் ஆன்லைன் நிதி சம்பந்தமான பகுதி Ant Financial services. இதன் நிர்வாக தலைவராக இருப்பவர் 47 வயதான லூசிபெங். 1999ம் ஆண்டு 18 பேருடன் சேர்ந்து அலிபாபாவை நிறுவினார். இதற்கு முன்னதாக ஐந்து ஆண்டுகள் பொருளாதாரத்தை கற்பிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் 22 பில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.63 லட்சம் கோடி) நிதி திரட்டியுள்ளார்.
ரெபேக்கா நியுமன்:
அமெரிக்காவை சேர்ந்த 42 வயதான ரெபேக்கா நியுமன் தனது கணவருடன் சேர்ந்து WeWork மற்றும் We company ஆகியவற்றை நிறுவினார். அதேபோல் கடந்த 2017ம் ஆண்டு WeGrow என்ற தனியார் பள்ளியை நிறுவினார். அதேபோல் அவர் திரைப்படம், இசை உள்ளிட்ட துறைகளிலும் கால்பதித்துள்ளார். இவர் 19.5 பில்லியன் டாலர் ( ரூ.1.44 லட்சம் கோடி) நிதி திரட்டியுள்ளார்.
டான் ஹூய் லிங்:
35 வயதான இவர் போக்குவரத்து நிறுவனமான Grab Holdings-ன் இணை நிறுவனர். இவர் கடந்த 2012ம் ஆண்டு முதல் 9 பில்லியன் டாலர்கள் (ரூ.66 ஆயிரம் கோடி) நிதி திரட்டியுள்ளார். இதற்கு முன்னதாக சில நிறுவனங்களில் பிசினஸ் ஆய்வாளராக இருந்துள்ளார்.
கேட் கீனன்:
ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவர் Judo Bank-ன் இணை நிறுவனர். சிறு, குறு தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு உதவும் நிறுவனம் இது. மேலும் Sayers நிறுவனத்தின் தலைமை விளம்பர அதிகாரியாகவும் இருக்கிறார். இவர் 1.4 பில்லியன் டாலர் (ரூ.10 ஆயிரம் கோடி) நிதி திரட்டியுள்ளார்.
விக்டோரியா வான் லென்னப்:
இங்கிலாந்தை சேர்ந்த 30 வயதான விக்டோரியா, Lendable நிறுவனத்தின் இணை நிறுவனராக உள்ளார். இது 2014ம் ஆண்டு நிறுவப்பட்டது. இது நுகர்வோருக்கான ஆன்லைன் கடன் வழங்கும் தளம். இவர் 1.2 பில்லியன் டாலர் (ரூ.8 ஆயிரம் கோடி) நிதி திரட்டியுள்ளார்.
கிறிஸ்டினா ஜுன்கிரா:
37 வயதான இவர் Nubank நிறுவனத்தின் இணை நிறுவனர். 2013ம் ஆண்டு நிறுவப்பட்ட இது டிஜிட்டல் வங்கிகளில் மிக பிரபலமானது. இந்தாண்டுக்கான ’40 under 40′ பட்டியலில் இடம்பிடித்துள்ளார். பிசினஸில் வளர்ந்து வரும் இளம் தலைவர்களை பெருமைப்படுத்தும் பட்டியல் இது. இவர் 1.1 (ரூ.8 ஆயிரம் கோடி) பில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளார்.
பிரான்செஸ் காங்:
36 வயதான இவர், WeLab நிறுவனத்தின் இணை நிறுவனர். இது பொருளாதாரம் சம்பந்தமான தொழில்நுட்ப நிறுவனம். இவர் MBA படித்து முடித்துள்ளார். இவர் 581 மில்லியன் டாலர் (ரூ.4 ஆயிரம் லட்சம்) நிதி திரட்டியுள்ளார்.
சோஃபி கிம்:
தென்கொரியாவை சேர்ந்த 37 வயதான இவர் Market kurly என்ற நிறுவனத்தை நிறுவியுள்ளார். ஆன்லைன் மூலம் மளிகைப் பொருட்களை விற்பனை செய்யும் தளம் இது. இவர் 282 ( ரூ.2 ஆயிரம் லட்சம்) மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளார்.
லிசே லொம்பார்டோ:
சுவிட்சர்லாந்தை சேர்ந்த இவர் Arvelle Therapuetics நிறுவனத்தின் இணை நிறுவனர். இது மருந்துகள் சம்பந்தமான ஒரு நிறுவனம். இதில் அவர் 278 மில்லியன் டாலர் (ரூ. 2 ஆயிரம் லட்சம்) நிதி திரட்டியுள்ளார்.







