உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை: மெட்ரோ ரயிலில் பயணித்த இதயம்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த விவசாயியின் இதயம், வேறு நபருக்கு இதயமாற்று அறுவை சிகிச்சைக்காக, ஆளில்லாத மெட்ரோ ரயில் மூலம் கொண்டு செல்லப்பட்டு, பொருத்தப்பட்டது. சாலை விபத்தில் சிக்கி, மூளைச்சாவு அடைந்த தெலங்கானா மாநிலம் வாராங்கலை…

விபத்தில் மூளைச்சாவு அடைந்த விவசாயியின் இதயம், வேறு நபருக்கு இதயமாற்று அறுவை சிகிச்சைக்காக, ஆளில்லாத மெட்ரோ ரயில் மூலம் கொண்டு செல்லப்பட்டு, பொருத்தப்பட்டது.

சாலை விபத்தில் சிக்கி, மூளைச்சாவு அடைந்த தெலங்கானா மாநிலம் வாராங்கலை சேர்ந்த விவசாயி நரசிம்மா ரெட்டியின் உடல் உறுப்புக்களை அவரது குடும்பத்தினர் தானமாக அளித்தனர். ஹைதராபாதில் எல்.பி நகரில் உள்ள காமினேனி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மூளைச்சாவு அடைந்த விவசாயி நரசிம்மா ரெட்டியின் இதயம், ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நபருக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது.

எல்பி நகரில் இருந்து, ஜூபிலிஹில்ஸ் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சாலை வழியாக இதயத்தை கொண்டு செல்வதில் போக்குவரத்து சிக்கல்கள் ஏற்படும் என்று கருதிய அதிகாரிகள் அதனை ஹைதராபாத் மெட்ரோ ரயில் மூலம் கொண்டு செல்ல முடிவு செய்தனர். இதையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் மெட்ரோ ரயில்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட இதயம், அங்கிருந்து, ஆளில்லாத தனி மெட்ரோ ரயில் மூலம், 21 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதிக்கு 30 நிமிடத்தில் கொண்டு செல்லப்பட்டது. பின்னர், தனியார் மருத்துவமனையில், இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply