முக்கியச் செய்திகள் இந்தியா

யமஹா பைக் விற்பனை கிடுகிடு அதிகரிப்பு: காரணம் என்ன?

கடந்த ஆண்டை விட தற்போது யமஹா இரு சக்கர வாகனங்கள் அதிகளவில் விற்பனையாகியுள்ளன.

யமஹா இந்தியா நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், யமஹா இருசக்கர வாகனத்தின் மொத்த உள்நாட்டு விற்பனை 53.57 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தது. கடந்த ஜனவரி மாதம் முழுவதும் 55,151 இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. அதே சமயம் 2020 ஜனவரியில் உள்நாட்டு சந்தையில் 35,913 யமகா இருசக்கர வாகனங்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்


தற்போது பேசினோ 125 எஃப்ஐ (Fascino 125 Fi), ராய்சர் 125 எஃப்ஐ (RayZR 125 Fi), ராய்சர் ஸ்ட்ரிட் ரேலி 125 எஃப்ஐ (RayZR Street Rally 125 Fi) உள்ளிட்ட ஸ்கூட்டர்களையும் யமகா மோட்டார் இந்தியா தயாரிக்கிறது. அதுபோலவே ஆர்15 வெர்சன் 3.0 (R15 Version 3.0), எம்டி -15 (MT-15), எஃப்இசட் எஃப்ஐ (FZ FI), எஃப்இசட்எஸ் எஃப்ஐ வெர்சன் 3.0 (FZS FI Version 3.0), எஃப்இசட் 25 (FZ 25), எஃப்இசட்எஸ் 25 (FZS 25) உள்ளிட்ட இரு சக்கர வாகனங்களையும் விற்பனை செய்கிறது.

2020 ஜூலை முதல் டிசம்பர் வரையில் 6 மாதங்கள் யமஹா இந்தியா நிறுவனம் தொடர்ச்சியாக அதிக விற்பனையைக் கண்டுள்ளது. இரு சக்கர வாகனத்தின் விற்பனை என்பது 2020 ஜூலை மாதம் 4.32 %, ஆகஸ்ட் 14.8 %, செப்டம்பர் 17.36 %, அக்டோபர் 30.58 %, நவம்பர் 35.02%, டிசம்பரில் 33.02 % என்ற அளவில் உயர்ந்துள்ளது.

“ப்ளூடூத் மூலம் கனெக்‌ஷன் எஃப் (‘Connect X) செயலியை மோட்டார் சைக்கிளுடன் இணைக்கும் வசதியை யமஹா அண்மையில் அறிமுகப்படுத்தியது. பல வண்ணங்களில் வெளியான எம்டி- 15 பைக்குகள், விர்சுவல் யமஹா ஸ்டோர் மூலம் ஆன்லைன் ஷாப்பிங், யமஹா உதிரி பாகங்கள் மற்றும் பைக்குகளுக்கு ஏற்ற உடைகள் அமேசான் தளத்தில் கிடைப்பது ஆகியவை வாடிக்கையாளர்கள் மத்தியில் யமஹாவின் கவனத்தை ஈர்த்தன” என நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழர்களுக்கு எதிரான கூட்டணி திமுக கூட்டணி: ஜேபி நட்டா

Halley Karthik

உக்ரைன் தாக்குதலுக்கு புதின் அதிக விலை கொடுக்க நேரிடும்: பைடன்

Halley Karthik

அதிமுக தலைமை அலுவலக கலவரம் ; இபிஎஸ் ஆதரவாளர்கள் மட்டும் கைது

Web Editor

Leave a Reply