திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழா இன்று தொடங்கியது.
உடுமலை அருகே மிகவும் பெற்ற பிரசித்தி பெற்ற கொழுமம் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா கம்பம் நடுதல், பூவோடு எடுத்தல்,பறவை காவடி, அலகு குத்துதலுடன் இன்று சிறப்பாகத் தொடங்கியுள்ளது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகள் தமிழ்நாடு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறாமல் இருந்த நிலையில், சித்திரை மாதம் கொண்டாடப்படும் கொழுமம் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா இன்று கோலகாலமாக துவங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 13ம் தேதி நடைப்பெற்ற மாரியம்மன் கோயில் தேர்திருவிழா 53 லட்சத்துக்கும் மேலான பக்தர்கள் கலந்து கொண்டு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில் 15 நாள் நோன்பு சாட்டுதலில் தொடங்கி கம்பம் நடுதல், பூவோடு எடுத்தல்,பறவை காவடி, அலகு குத்துதல் என பல்வேறு வேண்டுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருவிழாவில் பறவை காவடி காண்போரை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.







