இந்தோனேசியா எரிமலை வெடிப்பு; 4,000 மீட்டர் உயரத்திற்கு எழுந்த சாம்பல்!

இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் எரிமலை வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக 4,000 மீட்டர் உயரத்திற்கு சாம்பல் வெளியேறியுள்ளது. இதனால் அப்பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். Ili Lewotolok…

இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் எரிமலை வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

இதன் காரணமாக 4,000 மீட்டர் உயரத்திற்கு சாம்பல் வெளியேறியுள்ளது. இதனால் அப்பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். Ili Lewotolok மலையில் அமைந்துள்ள 28 கிராமங்களை சேர்ந்த 2,800 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிமலை வெடிப்பையடுத்து, அந்தப் பகுதியில் உள்ளூர் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. விமான நிலையமும் சில மணி நேரங்களுக்கு மூடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2017ம் ஆண்டு இந்தப் பகுதியில் எரிமலை வெடிப்பு நிகழ்ந்துள்ளது. மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply