பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி அளிக்குமாறு அந்நிறுவனம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் உலக நாடுகள் கடுமையாக அவதிப்பட்டு வரும் சூழலில், அதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் அமெரிக்காவின் பைசர் நிறுவனம் மற்றும் ஜெர்மனியின் பயான்டெக் நிறுவனம் இணைந்து ஒரு தடுப்பூசியை தயாரித்துள்ளன. இதற்கு இங்கிலாந்து மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் ஏற்கெனவே அனுமதி அளித்துள்ளன.
இந்நிலையில் இந்தியாவிலும் இந்த தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி அளிக்குமாறு பைசர் நிறுவனம் கோரியுள்ளது. இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் பைசர் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கு முன்னதாக அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளிடமும் இந்த நிறுவனம் தடுப்பூசி பயன்பாட்டுக்காக விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கு இந்தியாவில் அனுமதி கிடைக்கும் பட்சத்தில், இது விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.







