இந்தியாவில் எந்தவித பாகுபாடும் கிடையாது: பிரதமர் மோடி

இந்தியாவில் எந்தவித பாகுபாடும் கிடையாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் காணொலி காட்சி மூலம் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர…

இந்தியாவில் எந்தவித பாகுபாடும் கிடையாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் காணொலி காட்சி மூலம் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் கேர் நிதிக்கு அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் பங்கு முக்கியமானது என்றும், இந்தியாவின் தொன்மையை பல்கலைக்கழக கட்டடங்கள் எடுத்துரைப்பதாகவும் கூறினார்.

அனைவருக்கும் சமமான வாய்ப்பை நோக்கி நவீன இந்தியா செல்வதாக கூறிய பிரதமர், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு குட்டி இந்தியாவை காண முடியும் என்று தெரிவித்தார். அப்போது, நாட்டின் தேவையை புதிய கல்விக்கொள்கை பூர்த்தி செய்யும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply