காஞ்சியில் 2ம் கட்ட பரப்புரையை தொடங்கிய கமல்!

காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்ய கட்சித்தலைவர் கமல்ஹாசன், இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரையை தொடங்கினார். மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமலஹாசன் தனது 2வது கட்ட தேர்தல் பரப்புரையை காஞ்சிபுரத்தில் தொடங்கி பிரச்சாரத்தில்…

காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்ய கட்சித்தலைவர் கமல்ஹாசன், இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரையை தொடங்கினார்.

மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமலஹாசன் தனது 2வது கட்ட தேர்தல் பரப்புரையை காஞ்சிபுரத்தில் தொடங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அங்கு மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணா வாழ்ந்து மறைந்த அவருடைய நினைவு இல்லத்துக்கு சென்று அண்ணாவின் திருவுருவச் சிலையை பார்வையிட்டார்.

பின்பு நினைவு இல்லத்தில் உள்ள அண்ணா வாழ்ந்த பொழுது எடுக்கப்பட்ட வரலாற்று புகைப்படங்களை பார்வையிட்டார். அங்கு அண்ணா பயன்படுத்திய பொருட்களை பார்வையிட்ட பின்பு பார்வையாளர் புத்தகத்தில் காஞ்சி தலைவன் வீட்டில் மகிழ்ந்தேன், தெளிந்தேன், நெகிழ்ந்தேன் என குறிப்பிட்டார். பின்னர் அப்பகுதியில் உள்ள நெசவாளர்களை சந்திக்க பிள்ளையார்பாளையம் பகுதிக்குச் சென்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply