நடிகர் விஜய் அரசியலுக்கு வர வலியுறுத்தி, மயிலாடுதுறையில் விஜய் ரசிகர்கள் மொட்டையடித்து, கோயிலில் வழிபாடு செய்தனர்.
நடிகர் விஜய் திரைத்துறைக்கு வந்து 28-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவரது திரைப் பயணத்தை பற்றி சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர். அவரை அரசியலுக்கு வர வலியுறுத்தியும் ரசிகர்கள் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட ‘தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் 3 பேர், மயிலாடுதுறை அருகே பிரசித்திபெற்ற திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில், மொட்டையடித்து வழிபாடு செய்தனர்.
விஜய் அரசியலுக்கு வர வலியுறுத்தி மொட்டை அடித்துக்கொண்டதாக தெரிவித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் வருகையை உறுதி செய்துள்ள நிலையில் விஜய் ரசிகர்களின் இந்த கோரிக்கை தற்போது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.







