”ஆன்லைன் விளையாட்டுகளை தவிர்ப்போம்” என்ற தலைப்பில் கிரிக்கெட் போட்டி!

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் ”ஆன்லைன் விளையாட்டுகளை தவிர்ப்போம், மைதானத்தில் விளையாடுவதை ஊக்குவிப்போம்” என்ற தலைப்பில்  கிரிக்கெட் போட்டி துவக்க விழா இன்று நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் ரைசிங் ஸ்டார் கிரிக்கெட் கிளப் சார்பாக…

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் ”ஆன்லைன் விளையாட்டுகளை தவிர்ப்போம், மைதானத்தில் விளையாடுவதை ஊக்குவிப்போம்” என்ற தலைப்பில்  கிரிக்கெட் போட்டி துவக்க விழா இன்று நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் ரைசிங் ஸ்டார் கிரிக்கெட் கிளப் சார்பாக
:”ஆன்லைன் விளையாட்டுகளை தவிர்ப்போம், மைதானத்தில் விளையாடுவதை ஊக்குவிப்போம்”என்ற தலைப்பில் கிரிக்கெட் போட்டியின் துவக்க விழா என்று நடைபெற்றது.

கேளம்பாக்கம் ஒன்றிய கவுன்சிலர் திவ்யா வினோத் கண்ணன் ஏற்பாட்டில் நடைபெறும்
இந்த கிரிக்கெட் போட்டியினை திருப்போரூர் அதிமுக ஒன்றிய செயலாளர் குமரவேல்
துவக்கி வைத்தார். இந்த போட்டியில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட
பல்வேறு அணிகள் பங்கேற்கின்றன.

இதில் வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு முதல் பரிசாக 30 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது பரிசாக 20 ஆயிரம் ரூபாயும், மூன்றாவது பரிசாக 10 ஆயிரம் ரூபாயும் ஆட்ட நாயகனுக்கு 2000 ரூபாயும் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.