நாட்டின் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் ஆன்லைன் வணிகத்தை அடித்து விரட்ட வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் கேட்டுக் கொண்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அச்சரப்பாக்கத்தில் வணிகர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் பேசியதாவது:
நம் நாட்டில் அந்நிய வணிகம் மேலோங்கி வருகிறது. அந்நிய வணிகம் உள்நாட்டு வணிகத்தை உயிரோடு குழி தோண்டி புதைக்கிறது. இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். வணிகர்கள் நம் நாட்டு தயாரிப்புகளை பார்த்து வாங்கி அதை விற்பனை செய்ய வேண்டும். ஆன்லைன் வணிகத்தை அடித்து விரட்ட வேண்டும்.
இவ்வாறு வெள்ளையன் பேசினார்.







