உதகை மலர் கண்காட்சிக்காக பூங்காவை பொலிவுபடுத்தும் ஊழியர்கள்!

உதகை மலர் கண்காட்சிக்காக பூங்காவை பொலிவுபடுத்தும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சுற்றுலா பயணிகளை கவர உதகை அரசு தாவரவியல் பூங்காவில் தோட்டக்கலை துறை சார்பில், கோடை காலத்தில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.…

உதகை மலர் கண்காட்சிக்காக பூங்காவை பொலிவுபடுத்தும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சுற்றுலா பயணிகளை கவர உதகை அரசு தாவரவியல் பூங்காவில் தோட்டக்கலை துறை சார்பில், கோடை காலத்தில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். தொடர்ந்து, இந்த ஆண்டு 125 வது மலர்கள் கண்காட்சி வரும் 19ஆம் தேதி துவங்கி 5 நாட்கள் நடைபெற உள்ளது.

இதனைத் தொடர்ந்து, பூங்காவில் உள்ள பெரிய புல் மைதானத்தில் புற்கள் சமன் செய்து,
தண்ணீர் தெளித்து பராமரிக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், தாவரவியல் பூங்காவில் நுழைவு வாயில் மற்றும் நிழற்குடைகள் வர்ணம் பூசப்பட்டு வருகின்றன. சுற்றுலா பயணிகள் அமரும் இருக்கைகள் மற்றும்  நடைபாதைகளை சீரமைக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், மலர் தொட்டிகளில் நடவு செய்யப்பட்டுள்ள டேலியா, பிரன்ட்ச் மேரி கோல்ட்,
வில்லியம், பெட்டுனியா மற்றும் சால்வியா உள்ளிட்ட மலர்கள் சுற்றுலா பயணிகளின்
கண்களுக்கு விருந்து படைக்கும் வகையில் பல்வேறு வண்ணங்களில் மலர்கள் பூக்க
துவங்கியுள்ளன. அதேபோல் பூங்காவை சீரமைக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள்
தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

——–கு.பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.