அரிக்கொம்பன் நலம்பெற வேண்டி மகா கணபதி ஹோமம்!

அரிக்கொம்பன் யானைக்காக தேனியில் விசேஷ பூஜை நடைபெற்றது. கேரளாவின்  மூணாறு பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த அரிக்கொம்பன் யானை நீண்ட போராட்டத்திற்கு பின்னர் பிடிக்கப்பட்டு தமிழக கேரளா எல்லை பகுதியில் விடப்பட்டது. பின்னர் தேனி…

அரிக்கொம்பன் யானைக்காக தேனியில் விசேஷ பூஜை நடைபெற்றது.

கேரளாவின்  மூணாறு பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த அரிக்கொம்பன் யானை நீண்ட போராட்டத்திற்கு பின்னர் பிடிக்கப்பட்டு தமிழக கேரளா எல்லை பகுதியில்
விடப்பட்டது.

பின்னர் தேனி மாவட்டம் கம்பம் ஊருக்குள் புகுந்த அரிக்கொம்பன் யானை பொதுமக்களை அச்சுறுத்திய நிலையில் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மயக்க ஊசி
செலுத்தப்பட்டு பிடிக்கப்பட்டது. வனத்துறையினரால் பிடிக்கப்பட்ட அரிக்கொமபன் யானை திருநெல்வேலி மாவட்டத்தின் வன பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது.

இந்த நிலையில் அரிக்கொம்பன் யானைக்கு தும்பிக்கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்ட நிலையில் யானை பூரண குணமடைய வேண்டியும், யானைக்கு மன அமைதி கிடைக்க வேண்டியும், உடல் நலத்துடன் பல ஆண்டுகள் வாழ வேண்டியும், தேனியில் உள்ள வீரபாண்டி கண்ணீஸ்வரமுடையார் திருக்கோயிலில் கேரள மாநில நம்பூதிரிகளைக் கொண்டு மகா கணபதி வேள்வி பூஜை நடைபெற்றது.

சிவசேனா கட்சியின் சார்பாக அதன் மாநில செயலாளர் குரு ஐயப்பன் தலைமையில் இந்த பூஜை நடத்தப்பட்டு அரிக்கொம்பன் யானைக்காக பிரார்த்தனைகளும் நடைபெற்றது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.