26.7 C
Chennai
September 24, 2023
இந்தியா செய்திகள்

ராஜஸ்தானில் ரூ.500 விலையில் சிலிண்டர் திட்டம்: முதலமைச்சர் அசோக் கெலாட் தொடங்கி வைத்தார்

ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ.500-க்கு ஏழைகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் இன்று தொடங்கி வைத்தார்.

ராஜஸ்தானில் ஏழை மக்களுக்கு ரூ.500 விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு இன்று தொடங்கி வைத்தது. மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் 6 மாதங்களே இருக்கும் நிலையில் இத்திட்டத்தை அரசு செயல்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே ஏழைகளுக்கு ரூ.500 விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் கெலாட் அறிவித்திருந்தார். சமீபத்தில் வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் கடந்த பிப்ரவரி மாதம் ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரையிலான சிரஞ்சீவி மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தையும் அவர் அறிவித்திருந்தார்.

”சேமிப்பும் நிவாரணமும் தான் ராஜஸ்தான் மாநில பட்ஜெட்டின் குறிக்கோளாகும். ரூ.500-க்கு சிலிண்டர் வழங்குவதன் மூலம் மக்களுக்கு நாங்கள் நிவாரணம் அளித்துள்ளோம். நாட்டில் உள்ள மக்களுக்கு சமூக பாதுகாப்பும், சுகாதார பாதுகாப்பும் கிடைக்க வேண்டும்” என்று முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார்.

ராஜஸ்தானில் எதிர்க்கட்சியான பாஜக, முதலமைச்சர் அசோக் கெலாட் அரசின் மானிய விலை சிலிண்டர் திட்டத்தை விமர்சித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை குறைப்புதான் இன்றைய தேவை. அதைவிடுத்து சிலிண்டருக்கு மானியம் ஏன் என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

ரூ.1150 மதிப்புள்ள சமையல் எரிவாயு சிலிண்டரை, 14 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.650 மானியம் விலையில் வழங்கினால் அரசுக்கு ரூ.60 கோடி செலவாகும் என்றும், இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி 73 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கினால் ரூ.1500 கோடி அரசுக்கு செலவாகும் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பதவியேற்பு

G SaravanaKumar

நிஃபா வைரஸ் எதிரொலி : பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய கேரள சுகாதாரத்துறை உத்தரவு

Web Editor

மத்திய அமைச்சர் அமித்ஷா வருகை உற்சாகத்தை அளிப்பதாக வானதி ஸ்ரீனிவாசன் பேட்டி!

Gayathri Venkatesan