
அரசு பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு எடுத்து தனியார் பள்ளிக்கு பாடம் நடத்துவது குறித்து புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தத அமைச்சர் செங்கோட்டையன் , வாரம்தோறும் சனிக்கிழமையன்று அரசு பள்ளி மாணவர்கள் கற்றல் திறனை அறியவும், சந்தேகங்களை தீர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அரசு பள்ளி ஆசியர்கள் விடுப்பு எடுத்து தனியார் பள்ளிக்கு பாடம் நடத்துவதாக புகார் ஏதேனும் வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர், இதுவரை 17 ஆயிரத்து 840 மாணவர்களுக்கு நீட் பயிற்சி வழங்கப்படுவதாக மேலும் குறிப்பிட்டார்.







