அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், டி ஷர்ட் அணிந்து வர தடை: மகாராஷ்டிர அரசு!

அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், டி சர்ட் அணிந்து அலுவலகத்திற்கு வர தடை விதித்து மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கான ஆடை கட்டுப்பாடுகளை மகாராஷ்டிர அரசு விதித்துள்ளது. அதன்படி, ஊழியர்கள் அலுவலகத்திற்கு வரும் போது…

அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், டி சர்ட் அணிந்து அலுவலகத்திற்கு வர தடை விதித்து மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கான ஆடை கட்டுப்பாடுகளை மகாராஷ்டிர அரசு விதித்துள்ளது. அதன்படி, ஊழியர்கள் அலுவலகத்திற்கு வரும் போது ஜீன்ஸ், டி சர்ட் அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் புடவை, சல்வார், சுடிதார் உள்ளிட்டவைகளை அணிந்து வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் ஆண்கள் ஷர்ட் அல்லது குர்தா உள்ளிட்டவைகளை அணிந்து வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் துப்பட்டா வேண்டுமானால் அணிந்து கொள்ளலாம்.

இதுமட்டுமல்லாமல் ஊழியர்கள் வாரம் ஒரு முறை கதர் ஆடைகளை அணிந்து வருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. அதேபோல் ஊழியர்கள் அனைவரும் சுத்தமான ஆடைகளை அணிந்து வர வேண்டும். இதுதொடர்பாக அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மாநில அரசு சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

மக்கள் மத்தியில் அரசு ஊழியர்களுக்கான மதிப்பை அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply