அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோயிலில் குவிந்த பக்தர்கள்!

அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.  விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில். இந்த…

அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். 

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில
அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில். இந்த
கோயிலானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
இந்தகோயிலுக்கு கடந்த ஆண்டுகளில் தினந்தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட
நிலையில் 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 10 பக்தர்கள் உயிரிழந்ததை
அடுத்து மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை ,பௌர்ணமி ஆகிய நாட்கள் மட்டுமே பக்தர் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

சகரகிரியில் தற்போதும் சித்தர்கள் வாழ்ந்து வழிபட்டு வருவதாக கூறப்படுவதால் இது சித்தர்களின் சொர்க்க பூமி எனவும் அழைக்கப்படுகிறது .பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த கோயிலுக்கு வைகாசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு கடந்த 17ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி வழங்கி இருந்தத நிலையில் இன்று அமாவாசை என்பதால் அதிகாலை முதலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி கோயில் அடிவாரப் பகுதியில் குவிந்து தற்போது மலை ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

காலை 6 மணி முதல் 12 மணி மட்டுமே மக்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி
வழங்கப்பட்டுள்ளது .நீரோடைகளில குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்கள் இரவில் தங்குவதற்கு அனுமதி இல்லை எனவும் சாமி தரிசனம்
முடித்த உடன் அடிவாரப் பகுதியை நோக்கி இறங்கி விட வேண்டும் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் மழை பெய்தால் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.