அமெரிக்காவின் அதிநவீன போர் விமானங்களில் ஒன்றான எஃப்-18 போர் விமானத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.
அமெரிக்கா – இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையேயான 2+2 பேச்சுவார்த்தையை கடந்த மாதம் நடைபெற்றது. இதில் பாதுகாப்பு மற்றும் இருநாட்டு உறவுகள் தொடர்பாக பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்நிலையில் அமெரிக்காவின் அதிநவீன போர் விமானமான எப்-18 ஐ இந்தியாவின் கடற்படைக்கு விற்பனை செய்ய அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. மேலும் சீ கார்டியன் ரக ஆளில்லா விமானங்கள் உள்பட நவீன ஆயுதங்களையும் விற்க முன்வந்துள்ளது.
F/A-18C/D Hornet சிறப்பம்சங்கள்
அமெரிக்காவின் McDonnell Douglas நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இந்த எப்-18 இரண்டு நவீன டர்போஃபேன் ரக எஞ்சின்களை கொண்டது. கடற்படை மற்றும் விமானப்படைக்கும் பயன்படுத்தக்கூடிய இந்த போர் விமானங்களை தாக்குதல் மற்றும் பாதுகாப்புக்கு பயன்படுத்தலாம். சூறாவளி, புளுதிப்புயல் உள்ளிட்ட மோசமான வானிலையிலும் எதிரியின் இலக்கை துள்ளியமாக தாக்கும் வல்லமை கொண்டவை. மேலும் இந்த விமானம் மூலம் ஒரே நேரத்தில் எதிரியின் விமானத்தை சுட்டுவீழ்த்தவும் எதிரிகளில் நிலையை குண்டு வீசி தாக்கியளிக்கும் திறன் கொண்டவை.
தற்போதைய ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா மற்றும் தற்போது கட்டப்பட்டு வரும் விமானந்தாங்கி கப்பலில் இருந்து தாக்குதல்களுக்கு பயன்படுத்துவதற்காக 57 போர் விமானங்களை கையகப்படுத்த வேண்டும் என இந்திய கடற்படை சில ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.







