முக்கியச் செய்திகள் இந்தியா

12 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி: அனுமதி வழங்கப்படுவதாக தகவல்

12 வயதுக்கு மேற்பட்டோருக்கான ZyCov-D என்ற தடுப்பூசியை அவசர காலப் பயன்பாட்டின் கீழ் பயன்படுத்த மத்திய மருந்து கட்டுப்பாடு ஜெனரல் அமைப்பு இன்னும் சில நாட்களில் அனுமதி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ZyCov-D தடுப்பூசியானது 18 வயதுக்கு மேற்பட்டோரிடமும், அதே போல 12 வயதுக்கு மேற்பட்டோரிடமும் செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளது. பரிசோதனையின் அடிப்படையில், ZyCov-D தடுப்பூசி திருப்திகரமான செயல்பாட்டைக் கொண்டிருந்ததாக வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில் தடுப்பூசி ஆய்வு வல்லுநர் கூட்டம் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ZyCov-D தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் பங்கேற்போர், தங்கள் தடுப்பூசியின் திறனை நிரூபிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய தடுப்பூசி நிர்வாகத்துக்கான தேசிய வல்லுநர் குழுவின் தலைவர் என்.கே.அரோரா கூறுகையில், 12 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டம் வரும் செப்டம்மாதம் தொடங்கும். எனினும், இந்த தடுப்பூசியை அவசரப் பயன்பாட்டுக்காக அனுமதி சில வாரங்களில் வழங்கப்பட உள்ளது,” என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

குரங்கு அம்மை நோய்; வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

G SaravanaKumar

கோவையில் சவர்மா கடைகளில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு

Halley Karthik

5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

EZHILARASAN D