விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு உயிரிழப்பு

ஆவடியில் உள்ள விமானப்படை வளாகத்தில் வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆவடியில் உள்ள மத்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான விமானப்படை வளாகம் உள்ளது. இங்கு உத்தரப்பிரதேசத்தை…

ஆவடியில் உள்ள விமானப்படை வளாகத்தில் வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடியில் உள்ள மத்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான விமானப்படை வளாகம் உள்ளது. இங்கு உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஆகாஷ் விசுவகர்மா என்பவர் பணியாற்றி வந்தார். வழக்கம்போல் இவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திடீரென அவர் இருந்த பகுதியில் இருந்து துப்பாக்கி சத்தம் கேட்டது. இதையடுத்து வளாகத்தின் மற்ற பகுதியில் இருந்த வீரர்கள் அங்கு சென்று பார்த்தனர்.

அப்போது ஆகாஷ் விசுவகர்மா தலையில் குண்டு பாய்ந்து இறந்து கிடந்தார். அவர் தனது கையில் வைத்திருந்த இன்சாட் வகை துப்பாக்கியால் தலையில் சுட்டு உயிரை மாய்த்துக்  கொண்டிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர் தஉயிரை மாய்த்துக் கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.