ரூ. 360 கோடி நஷ்டமடைந்த ஜொமேட்டோ நிறுவனம்

ஜொமேட்டோ நிறுவனம் 4ஆவது காலாண்டில் ரூ. 360 கோடி இழந்துள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து ஜொமேட்டோ நிறுவனம் திங்கள்கிழமை தாக்கல் செய்த அறிக்கையில், கடந்த ஆண்டில் ரூ. 134.2 கோடி நஷ்டமடைந்த நிலையில், இந்த ஆண்டு…

ஜொமேட்டோ நிறுவனம் 4ஆவது காலாண்டில் ரூ. 360 கோடி இழந்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஜொமேட்டோ நிறுவனம் திங்கள்கிழமை தாக்கல் செய்த அறிக்கையில், கடந்த ஆண்டில் ரூ. 134.2 கோடி நஷ்டமடைந்த நிலையில், இந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் 4 ஆவது காலாண்டில் ரூ. 359.7 கோடி நஷ்டமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்நிறுவனத்தின் 4ஆவது காலாண்டு வருவாய் ரூ. 1,212 கோடி உயர்ந்துள்ளது. இது ஆண்டுக்கு 75% வருவாய் உயர்வைக் குறிக்கிறது. மேலும், இந்த காலாண்டில் மொத்த ஆர்டரின் மதிப்பு ரூ. 5,850 கோடியைத் தொட்டுள்ளது. இது ஒவ்வொரு காலாண்டு மற்றும் ஆண்டுக்கு 6 சதவீதம் முதல் 77 சதவீதம் வரை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

மேலும், 4வது காலாண்டில் வாடிக்கையாளர்களின் மாதாந்திரப் பரிவர்த்தனை 15.3 மில்லியனாக இருந்த நிலையில், தற்போது 15.7 மில்லியனாக அதே காலாண்டில் உயர்ந்துள்ளது.

இதுகுறித்து, ஜொமேட்டோ நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல் கூறுகையில், இரு கடினமான காலாண்டுக்குப் பிறகு எங்களுடைய வளர்ச்சிப் பாதைக்கு மீண்டும் திரும்பியுள்ளோம். இனி எங்களுடைய வளர்ச்சியை பாதிக்கும் கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளை நாங்கள் நிச்சயமாக எதிர்பார்க்க மாட்டோம் என்றார்.

தலைமை நிதி அதிகாரி அக்ஷாந்த் கோயல் பேசுகையில், அடுத்த ஆண்டில் வருவாய் வளர்ச்சி இரட்டை இலக்கமாக அதிகரிக்கும். மேலும், சரிசெய்யப்பட்ட ஈபிஐடிடிஏ இழப்புகள் அர்த்தமுள்ள வகையில் குறையும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.