முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஜிம்பாவே த்ரில் வெற்றி; 1 ரன் வித்தியாசத்தில் பாக். அதிர்ச்சி தோல்வி

சூப்பர் 12 சுற்று போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி ஜிம்பாவே அணி த்ரில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று நடைபெற்ற 3-வது போட்டியில் ஜிம்பாப்வே-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங் தேர்வு செய்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியில் தொடக்கவீரர்களாக களமிறங்கிய வெஸ்லி 17 ரன்களும் கிரேக் எர்வின் 19 ரன்களும் எடுத்தனர். அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 31 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் சார்பில் முகமது வாசிம் ஜூனியர் 4 விக்கெட்டுகளும், ஷதாப் கான் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். ஹரிஷ் ரவூப் 1 விக்கெட் எடுத்தார்.

இதையடுத்து, 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி  களமிறங்கியது. பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய முகமது ரிஸ்வான் 15 ரன்களிலும் பாபர் அசாம் 4 ரன்களிலும் அவுட்டாகினர். பொறுப்புடன் ஆடிய ஷான் மசூத் 44 ரன்னில் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய இப்திகார் அகமது 5 ரன்களும் ஷதாப் கான் 17 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். ஹைதர் அலி டக் அவுட்டானார். இறுதியில், பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் ஜிம்பாப்வே அணி ஒரு ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி த்ரில் வெற்றியை பதிவு செய்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அரசு சார்பில் கட்டப்படும் கட்டடங்கள், கட்டுமான பொருட்களின் விலைப்பட்டியல் வெளியீடு

Halley Karthik

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்

G SaravanaKumar

ஓபிஎஸ் – இபிஎஸ் மோதல் எதிரொலி ; நமது அம்மா ஆசிரியர் விலகல்

Web Editor